நாட்டாமை, தலைப்பை மாத்தி வை !!!
கார்த்திக்கின் இந்தப் பதிவு தந்த உற்சாகத்தில், நமது வலைப்பதிவர் சிலரின் தலைப்புகளை மாற்றினால் எப்படி இருக்கும் என்று விபரீத கற்பனை செய்ததன் விளைவு கீழுள்ளவை.
யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம் :)
சும்மா ஒரு ஜாலிக்குத் தான் !!!
முதலில் தமிழ்மணத் தலைவரிடமிருந்து தொடங்குகிறேன் !
காசி --- சித்தூர்க்காரனின் சிந்தனைக் குதறல்கள் அல்லது சித்தூர்க்காரனின் சிதறிய சிந்தனைகள்
தேசிகன் --- தேசிகன் வலைப்பதிவுக்கு வரலேன்னா ஜாக்கிரதை !
கார்த்திக் --- karthik's EVERYTHING is CLOGS !
ரோசாவசந்த் --- ஒரு குட்டி பூர்ஷ்வாவின் சண்டையும், சச்சரவும் சில செருப்படிகளும்
டோண்டு ராகவன் ---- Dondu's 'DONTS' ONLY
ஐகராஸ் பிரகாஷ் --- Prakash's "CHRONIC"les
அல்வாசிட்டி விஜய் --- அடிச்சுக் கொல்லு !
மூக்கு சுந்தர் --- என் கோக்குமாக்கு
தங்கமணி --- E(n) அலறல்
மாண்ட்ரீசர் --- விக்கல்
ராம்கி --- சில்லுண்டியின் பெருங்குழப்பங்கள்
மாயவரத்தான் --- ஆயிரம் ஆனாலும் நக்கல் போகாது !!! (அல்லது Narrow vision!)
இரவிக்குமார் --- நீங்கள் கேட்காதவை !!!
காஞ்சி பிலிம்ஸ் --- பாஞ்சிக் கடி !
ஆச்சி மகன் ---- சுற்றத்தின் கொடுமை
வந்தியத்தேவன் --- தொடரும் வம்படி !!!
என்றென்றும் அன்புடன் பாலா ---- ????????????????????
என்றென்றும் அன்புடன்
பாலா
5 மறுமொழிகள்:
தமிழில் உளற - என்றென்றும் 'வம்புடன்' பாலா..!
நல்லவேளை. நான் தப்பினேன்
அட! அப்பப்போ நம்ம ப்ளாக்கு பெயரும் கிழியுது டோய். என் பங்குக்கு உங்க ப்ளாக்கு பெயர் எனக்கு இப்படி தான் ஒலிக்கிறது.
தமிழ் உல்லாயீஈஈஈஈ - என்றென்றும் கொம்புடன் பாலா.
(உல்லாயி என்றால் குழந்தை தாலாட்டுப்பாடலில் வரும் அந்த 'உல்லாயீஈஈஈஈ')
நல்ல வேளையா நம்மள விட்டுபுட்டீங்க பாலா !! :)
கூடிய சீக்கிரம் நான் ஒரு லிஸ்ட் போட போறேன் ! :)
வீ எம்
லேட்டாத்தான் படிக்க முடிஞ்சது... கலக்கல். ரொம்ப நாளைக்குப்புறம் வாய்விட்டு சிரிக்கிற மாதிரி ஒரு வலைப்பூ மேட்டர். கீப் இட் அப்!
Post a Comment